வரலாறு
உலகத் தமிழிசைப் பல்கலைக்கழகம்
உலகத் தமிழிசைப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர், 1970-களிலிருந்து தமிழிசையில் உள்ள பல்வேறு மாற்றங்களையும் பல்வேறு வகைகளையும் ஆராய்ச்சி செய்து பல ஆண்டுகளாகத் தமிழிசையைக் கற்றறிந்ததன் மூலம் அதைக் கற்பிக்கும் நோக்கம் மற்றும் வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழிசையின் மூல வடிவம் பண்ணிசையாகும். இந்நாளில் கர்நாடக இசை என்று உலகில் அறியப்படும் இந்த செவ்விசையானது பண்ணிசையின் பரிணாம வளர்ச்சியில் உருவானது. இது உலகின் மிகவும் கடினமான இசை வடிவங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது.
எங்கள் பல்கலைக்கழகம் கடந்தகால வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் தமிழிசைக்கு சான்றளிக்கும் அதிகாரமாக இருக்க, முழுமையான ஆராய்ச்சி மற்றும் துல்லியமான தமிழிசை மரபினை வழங்குவதற்காகவும் புதுமையான படைப்புகளை உருவாக்குவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளதாகும்.