திருமிகு அஞ்சனா. மா அவர்கள் கருநாடக குரல் இசை ஆசிரியர். அகில இந்திய வானொலியில் பி-கிரேடு கலைஞர், அஹோபில மடத்தின் 45வது ஜீரின் தங்கப்பதக்கம், மயிலாப்பூர் அகாடமியின் தேவாரம் விருது விழாவில் சிறந்த மாணவி, பாண்டிச்சேரி பொதிபா அகத்தலையில் நடந்த தேவாரத்தில் பாடியதற்காக மாநில அளவிலான முதல் பரிசு மற்றும் தமிழிசை கல்லூரியில் மதிப்புமிக்க தன்பூரா பரிசு பெற்றவர்.
திருமிகு பிருந்தா இராகவன் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய இசையில் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள சுவாமி விபுலானந்தா அழகியல் ஆய்வுக் கழகத்தில் இசைப் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
திருச்சியில் உள்ள கலைக் காவிரி நுண்கலை கல்லூரியில் 2014-ம் ஆண்டில் இசையில் இளங்கலைப் பட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற இவர் 12 ஆண்டுகளாக இசை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அம்மையார் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமையில் 2013-ம் ஆண்டில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் குழுவாக பாடல் பாடி பாராட்டுகளைப் பெற்றவர். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இணைந்த சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரத்தில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பாக்கெட் FM என்கிற வானொலியில் குரல்வழிக் கலைஞராக பணியாற்றியுள்ளார். இணையதளம் வாயிலாக உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு இசைப் பயிற்சி மற்றும் குரல்வளப் பயிற்சி அளித்திருக்கிறார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வசித்து வரும் முனைவர் கணேஷ் இராமன் அவர்கள் கர்நாடக இசையில் உள்ள பாலச்சக்கரத்தில் சிறப்பு ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். மனோதர்ம நோக்கில் மாணவர்களுக்கு பாடல்கள் கற்பித்து வருகிறார். இராக ஆலாபனை, கற்பனை சுரங்கள், தாளம் விவாதி இராகம் ஆகியவற்றை சிறப்பாகக் கற்பிப்பவர். தற்பொழுது திருவையாறு கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழ்நாடு அரசு வழங்கும் “இசைக்கலை வளர்மணி” என்ற விருதினையும் Best Classical Music Judgement” என்ற விருதினையும் ZeeTamil நடத்தும் இசை நிகழ்வில் இசை நிகழ்த்தியுள்ளார்.
திருமிகு ஈஸ்வரன் அவர்கள் மதுரை அரசு இசை கல்லூரியில் இசை மற்றும் இசை ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பை பெற்றவர். மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பள்ளிகளில் இசை ஆசிரியராகப் பணி புரிந்ததோடு ஐந்து ஆண்டுகள் மகாத்மா பள்ளியில் முழு நேரம் குரலிசை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் “உலகப் பொதுமறையில் ஓர் உலக சாதனை“ என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில், இவரால் திருக்குறள் இசையமைக்கப் பெற்று 5000 மாணவர்களால் பரத நாட்டியமும் ஆடி அரங்கேற்றப்பட்டது. தொடர்ந்து இணையத்தின் வழியாக இசைப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். 2018 ஆம் ஆண்டு ”உதிர்” என்னும் திரைப்படத்திற்கு இசை அமைத்தும் மேலும் பல படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். தற்பொழுது சென்னையில் வசிக்கும் இவர், அரசு இசைக் கல்லூரியில் பகுதி நேரம் தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறையாக இசைப்பயின்ற திருமிகு பிரேமலதா அவர்கள் சிறந்த பாடகர், இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர். பொதிகை, கலைஞர் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் இவர் இசை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் இதுவரை ஒன்பது அயல் நாடுகளுக்கு இசைப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிறப்பு விருதுகளை பெற்றுள்ள இவர் குறிப்பாக இசை கலைமாமணி விருதினை 2000 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
முனைவர் பாலசுப்பிரமணியன் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையில் ஆய்வு ஒருங்கிணைப்பாளராகவும் உதவிப் பேராசிரியராகவும் கடந்த ஐந்து மாதங்களாகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு சென்னைப் புதுக்கல்லூரி தமிழ்த்துறையில் ஓராண்டு காலமும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறையில் துறைத்தலைவராகவும் உதவிப் பேராசிரியராகவும் 16 ஆண்டுகள் பணியாற்றியவர். பல்வேறு இதழ்களில் பணியாற்றியவர். கலைச்செயல்பாடுகளிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருபவர். மொழிவனம் என்ற பெயரில் வலையொளித்தளத்தையும் சுயமாக இயக்கி வருகிறார். 2018 இல் தமிழக அரசிடமிருந்து இளம் ஆய்வாளர் விருது பெற்றவர். இலக்கியம், இலக்கணம், தத்துவம், பண்பாட்டு ஆய்வு, திறனாய்வு, கோட்பாடு, திரை, நாடகம், கலை எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். வெளியீடு, தொகுப்பு, பதிப்பு என 14 நூல்களை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வருபவர்.
முனைவர் சியாமளா ஒரு சிறந்த அனுபவம் மிகுந்த பாடகர் மற்றும் உலகின் மிகச்சிறந்த தகுதிபெற்ற குரல்வளப் பயிற்சியாளர் ஆவார். அவர் இந்தியா, நடுகிழக்கு மற்றும் பல நாடுகளில் இசைப் பயிற்சி அளிப்பவர். அவர் இந்தியாவின் பல தலை சிறந்த கர்நாடக இசைப் பாடகர்களுக்கு (திருமதி சுதா ரகுநாதன், திருமதி நித்யஸ்ரீ மஹாதேவன், திரு. உன்னி கிருஷ்ணன், திரு.ராமக்ரிஷ்ணமூர்த்தி, திருமதி ரஞ்சனி, திருமதி காயத்ரி, திரு. பரத் சுந்தர், திரு. குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா, செல்வி அமுதா முரளி) மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடர்களுக்கு (அன்ரேயா, மஞ்சரி, சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ) குரல்வளப் பயிற்சி மற்றும் சிகிச்சை அளித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள இந்திய இசைக்குழு மற்றும் சேர்ந்திசை பாடகர் அமைப்பிற்கும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சிலிக்கான் ஆந்திரா பல்கலைக்கழத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும், சென்னையின் மியூசிக் அகாடெமியிலும் வருகைப் பயிற்சியாளராக இருப்பவர்.
திரு. கேசவ் ஒரு சிறந்த பாடகர் மற்றும் இசைக் கலைஞர் ஆவார். இசையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற பின்னர் தற்போது இசையில் முனைவர் பட்டப் பயிற்சியில் உள்ளார். இவர் தமிழிசை மற்றும் குரல்வளப் பயிற்சியும் அளிப்பவர். மூன்று வயது முதல் இசைப் பயிற்சி பெறத்தொடங்கி இதுவரை 200 நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். பின்னணிப் பாடகராக இதுவரை சுமார் எட்டு திரைப்படங்களில் பாடியுள்ளார். தென்னிந்திய இசையமைப்பாளர்களான ஏ. ஆர். ரகுமான், அனிருத், இம்மான், விஜய் அந்தோணி, தமன், கார்த்திக் ராஜா, விஷால் சந்திரசேகர், ஜேக்ஸ் பிஜோய் மற்றும் சிலருடன் பயணித்துள்ள இவர் அவர்களுக்கு பாடகராக மட்டுமல்லாமல் இசை தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். 2018ல் விஜய் டிவி சூப்பர் சிங்கர் 6வது நிகழ்வில் முதல் பத்து போட்டியாளராகத் தேர்ச்சி பெற்றவர். அது தவிர பல ஊடகங்களில் பாராட்டுகளும் அங்கீகாரமும் பெற்றவர்.